ரஷ்யாவை சேர்ந்த மேலும் 35 பிரஜைகள் மீது தடை விதித்த கனடா

கனடா: இன்னும்... இன்னும் தடைகள்... ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் 35 பிரஜைகள் மீது தடைகளை விதிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ரஷ்யாவின் சக்தி வள நிறுவனங்களில் ஒன்றான கேஸ்ப்ரோம் நிறுவனம் உள்ளிட்ட சில சக்தி வள நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடா தொடர்ந்தும் உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படும் எனவும், ரஸ்யா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனிய கனேடிய காங்கிரஸ் உறுப்பினர்களினால் வின்னிபிக்கில் நடாத்தப்படும் மாநாட்டில் பங்குபற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மானிடோபா அரசாங்கம் சுமார் 12000 உக்ரைன் பிரஜைகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாக மாகாண முதல்வர் ஹீத்தர் ஸ்டாபான்சன் தெரிவித்துள்ளார்.