போதை பொருட்கள் விநியோகம் செய்த கனடிய பிரஜைக்கு அமெரிக்காவில் சிறை

அமெரிக்கா: அமெரிக்காவில், கனடிய பிரஜை ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர் போதைப்பொருட்கள் விற்பனை செய்தது என்று தெரிய வந்துள்ளது.

கனடிய சிறையொன்றிலிருந்து மிகவும் ஆபத்தான போதைப் பொருளை பல நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபேக் மாகாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பென்டய்ல் என்ற போதை மருந்து விநியோகம் செய்தார் என தெரிவிக்கப்படுகிறது. மொன்றியலைச் சேர்ந்த 43 வயதான் சான் நக்யுயின் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு நக்யுயின் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். போதை மருந்து விநியோகத்தில் ஈடுபட்டதாக நக்யுயின் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.