2021ல் கேப்டன்தான் முதல்வர்; மதுரையை அதிரடித்த தேமுதிக போஸ்டர்

2021 ல் கேப்டன்தான் முதல்வர் என்று மதுரையில் தேமுதிக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் மதுரையில் அவரது கட்சியினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் 'புரட்சிகர தமிழகத்தை, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தலைமையில் உருவாக்க தயாராவோம்' என கூறப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தமிழக அரசியலில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த இருந்தாலும், இப்போது அவரது கட்சி அந்த அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தவில்லை என்பதுதான் கள நிலவரம். அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவினரின் இந்த போஸ்டர் கூட்டணிக் கட்சியில் உள்ளவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. மேலும் இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.