ரேஷன் கார்டு விதிகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை

இந்தியா: இந்தியாவில் ரேஷன் கார்டு திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளபல மக்கள் குறைவான விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று கொண்டு வருகின்றனர். இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அந்த வகையில் தகுதியுடையவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. வசதி படைத்தோர்களும் ரேஷன் கார்டு மூலம் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதை அடுத்து இவர்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையை சரி செய்ய மத்திய உணவு வழங்கல் துறை ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்ற உள்ளது. இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு வருகிறது. இதனால் விரைவில் வறுமைக் கோட்டின் தரத்தை அரசு மாற்றப் போவதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் மூலம் வறுமை கோட்டின் பட்டியலில் இருந்து பலரும் வெளியேற வாய்ப்புள்ளது.

விதிகளை மாற்றிய பிறகு புதிய தரநிலைகளை அமல்படுத்திய பின் தகுதியான பயனாளிகளின் பட்டியலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.