காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு புது முயற்சி

இந்தியா: தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாத இறுதியிலிருந்தே காய்கறிகளின் விலை இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, தொடர்ந்து பெய்து வந்து பருவமழையின் காரணத்தினால் போதுமான தக்காளி விளைச்சல் இல்லாமல் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 200 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஓரளவுக்கு தக்காளியின் விலை குறைந்து பெரிய வெங்காயத்தின் விலை உயர துவங்கி விட்டது. இந்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு பண வீக்கத்தையும் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு மாதாந்திர பொருளாதார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை 50% வரைக்கும் உயர்ந்த காரணத்தினால் பணவீக்கம் திடீரென அதிகரித்துவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், தக்காளியின் வரத்து இன்னும் ஓரிரு மாதங்களில் உயரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த உணவுப் பொருட்களின் விளைவு அதிகரிப்பு தற்காலிகமானது எனவும், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் பணவீக்கத்தை குறைக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.