தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு

16ம் தேதி முதல் மழை... டிசம்பர் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையே நிலவுகிறது. இம்மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால் மீண்டும் 16ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் 16, 17 ஆகிய நாட்களில் தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.