காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவரான முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் குழுவின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து இந்த தலைமை செயலக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சவுமியா சாமிநாதன் என உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

மேலும் பாதிப்புகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காற்று மாசுபாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சுற்றுசூழலை மேம்படுத்துதல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல் போன்றவை பற்றியும் ஆலோசனை நடத்த உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.