திராவிட மாட ஆட்சி உயர்க்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தின் 165- வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக வாளாகத்தில் இன்று நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அதன் பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதையடுத்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இவ்விழாவில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது.சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது என அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: குடியரசு தலைவர் திரௌபதி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்தது பெருமைக்குரியது. இந்த பல்கலைக்கழகத்தில் தான் நமது நாட்டின் குடியரசு தலைவர்களாக இருந்த 6 பேர் படித்து உள்ளனர்.

மேலும் அறிஞர் அண்ணாவும் இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். நானும் இந்த பலகலைக்கழகத்தில் தான் படித்தேன். உங்களின் சீனியர் என்ற அடிப்படையில் நான் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உள்ளேன். மாணவர்கள் தகுதியான வேலை கிடைத்த உடன் படிப்பை நிறுத்த கூடாது. காமராஜர் பள்ளிக் கல்வியை வளர்த்தார், கருணாநிதி கல்லூரி கல்வியை வளர்த்தார், திராவிட மாட ஆட்சி உயர்க்கல்வியை வளர்த்து வருகிறது எனவும் அவர் கூறினார்.