ஓணம் பண்டிகையை ஒட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் பழனிசாமி மக்கள் அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் பூக்களால் கோலமிட்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து இறைவனை வழிபடுவர்.

ஆனால் இம்முறை கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது.

ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி திருவோணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி ஓணம் கொண்டாடப்படுகிறது என்றும் மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.