புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் முதல்வர் நேரடி ஆய்வு

முதல்வர் ஆய்வு... புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த புயலால் மழை கொட்டி தீர்த்ததுடன், பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள், குடிசைவீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த புயல் காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் சென்ற முதல்வர் பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில், விவசாய நிலங்களில் பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வரிடம், கலெக்டர் சஹாமுரி புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். பின்னர் துறைமுகம் பகுதியில் மீனவர்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வருடன், அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.