வழகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை


சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


எனவே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இதையடுத்து தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கூடுதல் ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.