செவ்வாய் கிரகத்தின் மணல் திட்டுகளில் உள்ள வட்ட வடிவிலான குழிகள்

அமெரிக்கா: நாசா வெளியிட்ட தகவல்... செவ்வாய் கிரகத்தின் மணல் திட்டுக்களில் திடீரென வட்ட வடிவிலான குழிகள் தோன்றியுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் விண்கலம், உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பரிசோதனை வண்ணக் கேமராவால் எடுத்த படத்தில் மணல் பரப்புகளில் வட்ட வடிவிலான குழிகள் பதிவாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் மணல் திட்டுகள் இருந்தாலும், இந்த மணல் திட்டுகள் அனைத்தும் முற்றிலும் வட்டமாக அமைந்திருப்பது அசாதாரணமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.