சேலம் போலீஸ் ஸ்டேஷன்களில் கமிஷனர் திடீர் ஆய்வு

சேலம்: சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். போலீஸ் கமிஷனரின் இந்த திடீர் ஆய்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சேலம், மாநகரில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், பள்ளப்பட்டி, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன்களில் நேற்று கமிஷனர் நஜ்முல் ேஹாதா ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் துணை கமிஷனர் மாடசாமி, லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குற்றவாளிகள் கைதின் போது கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள், பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்துவது குறித்து அறிவுகளை வழங்கினார்.

ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வழக்கு விபரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், ஆயுதங்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.