மேகாலயா சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஷில்லாங்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை... மேகாலயா சட்டசபைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தனியாக வசிக்கும் தாய்மார்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

இதற்காக ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ரூ.36 ஆயிரம் வரவு வைக்கப்படும். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது.

எனவே இளைஞர்கள் வேலை தேடி டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களுக்கு செல்வதை தடுக்க, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைத்து வளர்ச்சி நலத்திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவை உட்பட இன்னும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.