கனடாவில் ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 685 பேர் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 864பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 613பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 19ஆயிரத்து 32பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 53ஆயிரத்து 219பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 154பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.