தமிழகத்தில் கரோனா பாதிப்பு 502-ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் 502 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருப்பூரில் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் 254 ஆண்கள், 248 பெண்கள் என்று நேற்று 502 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 136 பேர், கன்னியாகுமரியில் மட்டும் 52, கோவையில் மட்டும் 42, செங்கல்பட்டில் மட்டும் 28, கன்னியாகுமரியில் மட்டும் 36, கோவை, திருவள்ளூரில் தலா 28, சேலத்தில் மட்டும் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்குகரோனா கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், விருதுநகரில் ஒருவருக்குகூட பாதிப்பு இல்லை .தமிழகம் முழுவதும் 3,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் நேற்று 329 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர் உயிரிழந்தார் என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.