வேலூர் மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 776 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 11,815 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11,913 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,519 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 177 பேர் உயிரிழந்துள்ளனர்.