விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் 6,398 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் 6,398 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,556 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 60 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.