மதுரை மாவட்டத்தில் புதிதாக 260 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் புதிதாக 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 தினங்களுக்கு பின்பு நேற்று இறங்குமுகத்துக்கு வந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 4,380 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,640 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக மதுரையில் வருகிற 12-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.