அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேருக்கு கொரோனா

அண்டார்டிகாவிலும் கொரோனா... குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 222 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரை 7.6 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 16.94 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ், தற்போது மிக குறைந்த அளவிலான மனித நடமாட்டம் கொண்ட அண்டார்டிகா கண்டனத்தை விட்டுவைக்கவில்லை.

நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லாத இந்த கண்டத்தில், ஆயிரம் ஆராய்ச்சியாளர்களும், பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைந்திருக்கும் சிலி நாட்டு ஆராய்ச்சிக்கூடத்தில், 26 சிலி ராணுவ வீரர்களுக்கும், 10 ஆராய்ச்சி நிலையப் பராமரிப்பாளர்களுக்கும் என மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

36 பேரும், சிலி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள புன்டா அரினாஸ் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.