ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஓமன் நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஓமனில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஓமனில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. ஓமனில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 132 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனா தொற்று காரணமாக 16 பேர் பலியாகியதால், ஓமனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 150 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கொரோனா பாதிப்புடைய மற்ற அனைவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓமனில் குணமடைந்தவர்கள் சதவீதம் 93.5 ஆக உள்ளது.