இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது!

இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடருகிறது, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.

தற்போது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 96169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3029 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 36824 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 33053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1198 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில குஜராத் உள்ளது. அங்கு 11379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில தமிழ்நாடு உள்ளது. அங்கு 11224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.