மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 10,317 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 10,057 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 10,057 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,317 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,809 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 216 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.