டெல்லியில் கொரோனா பரவல் 30 சதவீதமாக அதிகரிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பு... டெல்லியில் கொரோனா பரவல் வீதம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் இரு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க அளவுக்கு தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் வீதம் அதிகரித்துள்ளது.

தொற்று பரவல் வீதம் அதிகமுள்ள 9 மாநிலங்களில் ஒன்றான டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த இருவாரங்களில் மட்டும், சராசரியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 100 பேரில் 5 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் தொற்று பரவல் வீதம், கடந்த மே 7 முதல் 21ம் தேதி வரை 7 சதவீதமாகவும், அதற்கு பின்னர் மே 19 முதல் ஜூன் 1 வரை 4.34 சதவீதமாகவும் இருந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 5 முதல் 18ம் தேதி வரையிலான இருவார காலத்தில் மட்டும் தொற்று பரவல் வீதம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மகராஷ்டிராவின் தொற்று பரவல் வீதம் 21 சதவீதமாக இருந்துள்ளது.

அதே போல் தெலங்கானாவில் 12 சதவீதம், குஜராத்தில் 10 சதவீதம், தமிழகத்தில் 12 சதவீதம், ஹரியானா மற்றும் உத்தரகாண்டில் 9 மற்றும் 6 சதவீதம் வீதம் கொரோனா பரவல் வீதம் உள்ளது.