உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் - வெளியான தகவல்

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், முக கவசம் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தற்போதைய மருந்தாக காணப்படுகிறது. ஆனால் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் என்ன செய்வதென்று அறியாது திகைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 48 லட்சத்து 91 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 7423 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 11-வது இடத்திலும் உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் விபரம்:-
அமெரிக்கா- 1,550,294
ரஷியா-290,678
ஸ்பெயின் -278,188
பிரேசில்- 255,368
பிரிட்டன்- 246,406
இத்தாலி- 225,886
பிரான்ஸ்- 179,927
ஜெர்மனி- 177,289
துருக்கி- 150,593
ஈரான்- 122,492
இந்தியா- 100,328