இங்கு டிசம்பர் 4ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு

மும்பை : பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை .... மும்பை நகரத்தில் எதிர்காலத்தில் பொது ஒழுங்கு மற்றும் அமைதி சீர்குலைந்து, மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற புகார்கள் சமீப காலமாக எழுந்து கொண்டு வருகிறது. எனவே இதன் காரணமாக மும்பை காவல்துறை ஊரடங்கு உத்தரவை தற்போது அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக மும்பை மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது டிசம்பர் 4ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது பற்றி துணை ஆணையர் விஷால் தாக்கூர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநகரில் 5 அல்லது அதற்கு மேல் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் பட்டாசுகளை வெடிப்பது, ஒலிபெருக்கிகள், இசைக்கருவிகளை இசைப்பது, ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவது, திருமண விழாக்கள், இறுதி ஊர்வலங்கள், நிறுவனங்கள், கிளப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பிற சங்கங்களின் பெரிய அளவிலான கூட்டங்கள் உட்பட அனைத்து வகையான ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த கட்டுப்பாடுகள் மும்பையில் டிசம்பர் 4ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அமலில் இருக்கும்.