ஹனுமங்கரின் மாவட்டத்தில் பத்ரா நகரில் ஊரடங்கு

ஹனுமன்கர் : ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சிரியா காந்தி பஞ்சாயத்து மற்றும் காந்தி பாடி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று ஈத் பண்டிகையின் போது ஆடுகளுடன் சேர்த்து மாடுகளையும் கொன்றுள்ளனர். இத்தகவலறிந்து சிரியா காந்தி கிராமத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாடுகளை கொன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.

அதனை பிறகும் அந்த கிராமத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது கற்கள் வீசி கிராமத்தினர்கள் தாக்குதல் செய்தனர்.

பசு வதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். அதாவது, பசுவதைக் குற்றச்சாட்டின் கீழ் நான்கு முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இதுவரைக்கும் கலவரத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் பேரில் பலரையும் போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை தடுக்க முயன்றனர். நீண்ட கலவரத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். இருந்தாலும் கூட ஹனுமங்கரின் பத்ரா நகரில் பதட்டமான சூழல் ஒன்று நிலவி வருகிறது. இதனால், நேற்று முழுவதும் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரின் பத்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக ஹனுமங்கரின் பத்ரா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.