மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்

திருச்சி: சைக்கிள் வழங்கும் திட்டம்... திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசி அமைச்சர், கல்வி கற்க எதுவும் தடை இல்லை. தடைகளை எல்லாம் தாண்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வர வைப்பதற்காகவே பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 20 ஆயிரத்து 399 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த காலங்களில் பலரின் வாழ்க்கை சக்கரங்களை உயர்த்தியது மிதிவண்டிகள், பெரிய தலைவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய பயணம் என்பது வீட்டில் இருந்து பள்ளிகளுக்காக அமைந்தது. அதனால் தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.

அதை தான் தமிழ்நாடு முதலமைச்சரும் வலியுறுத்துகிறார். முதலில் சாப்பிடுங்கள், பிறகு விளையாடுங்கள், அதன் பிறகு படியுங்கள் என்று கல்வி வளாகங்களுக்கு மாணவர்களை வரவைக்க முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

மேலும் முதலமைச்சர் பல மேடைகளில் நான் முதலமைச்சராக இருந்து இந்த திட்டங்களை தீட்டவில்லை, உங்கள் தந்தை ஸ்தானத்திலிருந்து தீட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவது எங்களுடைய பொறுப்பு, நீங்கள் படியுங்கள் என்று கூறினார்.