டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது

சென்னை: ரூ.35 கோடி வரை குறைந்த விற்பனை ... தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவித்தார். எனவே அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை கடந்த 22-ம் தேதி முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து அதனடிப்படையில், சென்னை மண்டலத்தில் 138 , கோவை மண்டலத்தில் 78 , மதுரை மண்டலத்தில் 125 , சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 என்ற முறையே 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனை 25 சதவீதம் வரை குறைந்து உள்ளது. சட்டவிரோத மார்கள் மூடல் 500 கடைகள் மூடப்பட்டதால் டாஸ்மாக்கில் வருமானம் 35 கோடி வரை குறைந்ததாக தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் ரூபாய் 150 கோடி வரை டாஸ்மாக்கில் விற்பனை நடைபெறும் தமிழகம் முழுவதும் டெண்டர் விடாமல் செயல்பட்டு வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக்மார்கள் மூடப்பட்டு உள்ளன. சில்லறை விற்பனை குறைந்து உள்ளதால் விரைவில் டாஸ்மாக் கடைகளில் பார் அமைப்பதற்கான டெண்டர் விட திட்டமிடப்பட்டு உள்ளது.