ரஷ்ய ஜனாதிபதி மகளுக்கு ரகசியமான முறையில் துணை டீன் பதவி

ரஷ்யா; ஜனாதிபதி மகளுக்கு உயர் பதவி... ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) மூத்த மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் ரகசியமான முறையில் உயர் பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

37 வயதான மரியா வொரொன்ட்சோவா (Maria Vorontsova) மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க மருத்துவத் துறையில் துணை டீன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் நெருங்கிய சகாவான, முன்னணி ஊழல் எதிர்ப்புப் புலனாய்வாளர் மரியா பெவ்சிக் மூலம் இந்த நியமனம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.