இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்வு .. கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு கொரோனா உண்டாகியுள்ளது

இந்தியா: இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து சமீப காலமாக தொற்று பரவளின் வேகமும்உயர்ந்துள்ளது. இரட்டை இலக்கத்தில் இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது 3 இலக்கத்திற்கு சென்று விட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 பேருக்கு பாதிப்பு உண்டாகியுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,83,021 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதமும் அதிகரித்து விட்டது. இது வரை மட்டும் 42 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கையும் 5,31,300 ஆக உயர்ந்துள்ளது. எனவே மக்களிடம் ஊரடங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும், பாதிப்பு இருந்தாலும் டெல்லி, உ.பி., ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சுகாதாரத்துறை முழுவீச்சில் தயாராகவுள்ளது. அந்த வகையில் இதுவரை மட்டும் 220.6 கோடி டோஸ் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என மாநில அரசுகளும் அறிவித்து உள்ளன.