டிசம்பர் 2ம் தேதியுடன் பிரிட்டனில் பொது முடக்கத்தை நீக்க முடிவு

டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவு... பிரிட்டனில் வருகிற டிசம்பர் 2-ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கிவிட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து வருகின்றன.

பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரமாக பரவிய தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது 2வது அலை பரவத்தொடங்கியதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தினார்.

இந்த பொதுமுடக்கம் நவ.,5ம் தேதி முதல் டிச.,2ம் தேதி வரை இருக்கும் எனவும் உத்தரவிட்டார். தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து டிச., 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை போரிஸ் ஜான்சன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.