கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் பீகாரில் மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த முடிவு

மீண்டும் முழு ஊரடங்கு... கடந்த சில நாட்களில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்ததால், பீகாரில் உள்ள நிதீஷ் குமார் அரசு மாநிலத்தில் முழுமையான ஊரடங்கை மீண்டும் அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், மால்கள், மத இடங்கள் என அனைத்தும் ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டும் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவை அறிவித்த பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, “கொரோனா பரவுவதைத் தடுக்க ஜூலை 16 முதல் 31 வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.