குறைந்து வரும் வரதட்சணை, மாறி வரும் இளைய தலைமுறையினர்

தங்கத்தின் விலையை பார்த்தால் என் பெண் மகளை நான் எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரிய வில்லை.என்று நினைக்கும் பெற்றோர்களே, கவலைப்படாதீர்கள். நமது தாத்தா, பாட்டி காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்துதான் மாப்பிள்ளை வீட்டார் திருமணங்களை நடத்தினர். காலப்போக்கில் எப்படியோ மணப்பெண் வீட்டார், மாப்பிள்ளைகளுக்கு நகை, நட்டு, ரொக்கம் தரும் சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது காலம் மெது,மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது.

காவல்துறை குற்றப் பதிவேடுகளில் வரதட்சணைக் கொடுமைகள் வெகுவாக குறைந்து விட்டன. நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரையில் முன்பு போல் மாப்பிள்ளை வீட்டார் அதிக அளவு வரதட்சணைகளை எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் அது. பெரும்பாலான திருமணங்கள் “போட நினைப்பதை போடுங்கள்’” என்ற ஒரு வரிக் கோரிக்கையிலேயே நடந்து முடிகின்றன. இதற்கு காரணங்கள் பெண்கள், ஆண்களுக்கு நிகராக பி.ஈ., எம்.பி.ஏ.,எம்.பி.பி.எஸ் என உயர் படிப்பு படிக்க ஆரம்பிக்க விட்டார்கள். அவர்களும் வேலைக்கு போகிறார்கள்.

ஆண்களை பொறுத்தமட்டில் இன்றைய இளைய தலை முறையினர் அதிக வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை. இன்னும் இது பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் பழைய காலத்து பெற்றோர்கள்தான். இளைய தலை முறையினரை பொருத்தமட்டில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும். நன்றாக சம்பாத்திக்க வேண்டும். தன்னுடன் நல்ல நட்பு வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும்தான். இன்றைய இளைய தலை முறை ஆண்களும். பெண்களும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இத்தகைய ஆண்- பெண் பிறப்பு விகித வேறுபாடு தவிர இன்றைய காலத்துப் பெண்கள் துணிச்சலாகப் புறப்பட்டு நகரத்தை நோக்கி படை எடுப்பதும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. பெண் படித்து வேலைக்கு போனால் போதும் வரதட்சணை ஒரு பொருட்டல்ல என்ற நியதிக்கு மனமகன் வீட்டார் வந்து விட்டார்கள். இதன் எதிரொலியாக வருகிற 2025 க்கு பிறகு நடை பெறும் திருமணங்களில் வரதட்சணை என்ற பேச்சுக்கு இடமே இருக்காது.