பள்ளி மாணவர்களுக்கு பாடங்களில் புதிய மதிப்பீட்டு முறை ...டெல்லி அரசு அறிமுகம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பள்ளிகள், ஜூன் 18 முதல் 28 வரை கோடை விடுமுறையை முடிந்து திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டெல்லி அரசு ஜூலை 1ஆம் தேதி முதல் தேசியத் தலைநகரில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத பள்ளிகளுக்கான புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வியாண்டில், கெஜ்ரிவால் அரசு மதிப்பீட்டு அளவுகோல்களை திருத்தியது குறிப்பிடத்தக்கது.

புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதல்களின்படி, 3-8 வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி மற்றும் தேசபக்தி பாடத்திட்டங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுவார்கள். மேலும் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேசபக்தி மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மை பாடத்திட்டங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

இதனையடுத்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டிற்கான கூடுதல் அளவுகோல் இருக்கும். அந்த கூடுதல் அளவுகோல், பிசினஸ் பிளாஸ்டர்ஸில் அவர்கள் பங்கேற்பதாகும்.

அதனால் பள்ளிகள், மாணவர்களின் முக்கிய பாடப்பிரிவுகள் பற்றிய அறிவை மட்டுமல்ல, மற்ற திறன்களையும் மதிப்பீடு செய்யலாம். இம்மதிப்பீட்டு அளவுகோல் மாணவர்களின் சமூக, உணர்ச்சி மற்றும் நெறிமுறை வளர்ச்சி மற்றும் அவர்களின் அறிவாற்றல் திறன்களுக்கு உதவும். கூடுதலாக, மாணவர்கள் தங்கள் பகுப்பாய்வு திறன் மற்றும் விமர்சன சிந்தனையை வலுப்படுத்த தனித்துவமான திட்டப்பணிகளையும் பெறுவார்கள்.

மேலும் மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ரோட் லேர்னிங் முறையை ஒழிப்பதற்கான முயற்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.