அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் பணி நியமனம் .... தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. இதனால், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் தத்தளிப்பதாக பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உடனடியாக நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து இருக்கிறது.


அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 6000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடுநிலைப்பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையிலேயே 6000 ஆசிரியர்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.