மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும், உயர்கல்வி சேருவதற்கான போட்டித்தேர்வுகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று, இந்த கல்வியாண்டிற்கான போட்டித்தேர்வு பற்றிய பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதாவது, இம்மாதத்திலிருந்து பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT- Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET – All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID – National Institute of Design – Design Aptitude Test )

மேலும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED- Undergraduate Common Entrance Examination for Design) ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கொண்டு வருகின்றன. இந்த நுழைவுத் தேர்வுகளுக்கான அனைத்து தகவல்களையும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.