மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரெயில் மூலம் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 406 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,201 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் - 462
செங்கல்பட்டு - 5,419
சென்னை - 58,327
கோவை - 538
கடலூர் - 1,073
தர்மபுரி - 81
திண்டுக்கல் - 472
ஈரோடு - 157
கள்ளக்குறிச்சி - 850
காஞ்சிபுரம் - 1,977
கன்னியாகுமரி - 368
கரூர் - 140
கிருஷ்ணகிரி - 140
மதுரை - 2,557
நாகை - 254
நாமக்கல் - 99
நீலகிரி - 89
பெரம்பலூர் - 158
புதுக்கோட்டை - 174
ராமநாதபுரம் - 839
ராணிப்பேட்டை - 754
சேலம் - 780
சிவகங்கை - 241
தென்காசி - 347
தஞ்சாவூர் - 448
தேனி - 702
திருப்பத்தூர் - 172
திருவள்ளூர் - 3,830
திருவண்ணாமலை - 1,824
திருவாரூர் - 455
தூத்துக்குடி - 943
திருநெல்வேலி - 796
திருப்பூர் - 180
திருச்சி - 682
வேலூர் - 1,308
விழுப்புரம் - 915
விருதுநகர் - 493