இந்த பகுதிக்கு நாளை முதல் 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்


சென்னை: உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இதையடுத்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது .

தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிற டிச. 1ல் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

எனவே இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு நாளை முதல் 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் 'மிச்சாங்' என்று பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.