இன்று ,நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிக பட்சமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய வானிலை அறிக்கை தற்போது வெளியீடு.

இதனை அடுத்து தற்போது வெளியான வானிலை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்கத்தின் எந்த பகுதியிலும் மழை பொழிவு எதுவும் பதிவாகவில்லை.

மேலும், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும், இதனால் வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அளவிற்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே காரணமாக, ஏப்ரல் 20ம் தேதி வடக்கு மற்றும் மேற்கு திசை தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பொழிய வாய்ப்புகள் இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் நிலவக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.