வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று,நாளை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: இன்று,நாளை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் .... வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து அதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும் , நாளையும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருக்கிறது. இது அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ வலுவடைவது பற்றி நாளை மறுநாள்தான் கணிக்க முடியும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வானிலை நிகழ்வை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 9-ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.