கடத்தல் வழக்கில் மெக்சிகோவில் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறை

மெக்சிகோ: முன்னாள் மேயருக்கு சிறை... கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் தென் மாகாணமான குரேரோவின் இகுவாலா நகரில் 6 முக்கிய சமூக தலைவர்களை கடத்திய வழக்கில், 62 வயதான ஜோஸ் லூயிஸ் அபார்காவு-க்கு, 92 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 52,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட நபர்களில் ஆர்டுரோ ஹெர்னாண்டஸ் என்ற விவசாயத் தலைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மெக்சிகோவில், நிகழ்ந்த மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களிலும் அபார்க்கா ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2014-இல் பேருந்துடன் 43 மாணவர்கள் மாயமானதால், அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு மத்திய மெக்சிகோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.