போலி நபர்கள் அதிகரிப்பாம்... ப்ளூ டிக் நிறுத்தி வைப்பாம்

வாஷிங்டன்: கட்டணம் உண்டு என்றாங்க. இப்போ போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ளதால் ட்விட்டரில் ப்ளூ டிக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சொல்றாங்க. என்னதான் நடக்கிறது ட்விட்டர் நிறுவனத்தில்.

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பிரமுகர்கள், விஐபிக்கள், பத்திரிகையாளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.

ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலிகணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளதாகவும் போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழலில் ப்ளூ டிக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.