செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்

செயல்பாட்டு நடைமுறை வெளியீடு... இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக தொற்றுநோயியல் கண்காணிப்பு மற்றும் எஸ்.ஓ.பி எனப்படும், நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக, உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய உருமாறிய வைரஸ் அதிவேகமாகப் பரவக் கூடியதாகவும், இளையோரை வெகுவாக பாதிக்கக் கூடியதாகவும் இருக்கும் என நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் மதிப்பிட்டுள்ளது.

இந்த உருமாறிய புதிய கொரோனா வைரஸ் 17 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, ஸ்பைக் புரதத்தில் உள்ள 'என்501ஒய்' மாற்றம். இந்த மாற்றம் வைரஸை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம்.

எனவே, இதற்கான தொற்று நோயியல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி - SOP - Standard Operating Procedure) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நுழைவுப் பகுதி மற்றும் கடந்த 4 வாரங்களில் (நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை) இங்கிலாந்திலிருந்து அல்லது இங்கிலாந்து வழியாக மாறி வந்த சர்வதேசப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்ட எஸ்ஓபி விவரிக்கிறது.

இவர்களிடம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேணடும் என எஸ்ஓபி-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது