அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் சென்னை எழும்பூா், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்ட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 950 மருத்துவா் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால், போதிய மருத்துவா்கள் இல்லாமல், பணியில் உள்ள மருத்துவா்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.

அதேபோல மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட கால முறை ஊதியத்துக்கான 354 அரசாணையை அமல்படுத்தாததால் மருத்துவா்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றனா்.