மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணி

தஞ்சாவூர்: வரும் 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது என்று தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMS) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டு தணிக்கை இயந்திரங்களுக்கான (VVPATS) முதற்கட்ட சரிபார்ப்பு (First Level Checking - FLC) பணி நடக்க உள்ளது.

இதற்காக பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Ltd) நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் இன்று 4ம் தேதி முதல் (செவ்வாய் கிழமை) முதல் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை (வியாழக் கிழமை) அனைத்து அங்கீகரிக்ப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் அமையப்பெற்றுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் உள்ள FLC அறையில் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்ப்பு (First Level Checking - FLC) பணி நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.