ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்

சென்னை: தமிழகத்தில் கடலில் மீன்களின் இனபெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் நாளை முதல் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க அனுமதி .... தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மீன்பிடி தடைக் காலம் 45 நாட்கள் விதிக்கப்படும்.

இதையடுத்து அதன் படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15 -ம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 30 -ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் விசை படகுகளும் ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது.

இந்த நிலையில் இன்று முதல் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதியில்லை என்றும் மே 30 -ம் தேதிக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.