சூறாவளி காற்று வீச உள்ளதால் மீனவர்கள் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

சென்னை: வானிலை ஆய்வு மையம் தற்போதைய அறிக்கையில் :- தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் சமீப நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் லேசான மழை பதிவாகியுள்ளது.

இதே போன்று இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மலைப் பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் உறை பணிக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் தமிழகத்தில் ஜனவரி 26-ம் தேதி வரை நீடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தமிழக தலைநகரான சென்னையில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.