ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் ரிலையன்ஸ்

ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருட்கள் விற்பனையை ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கி உள்ளது.அமேசான், பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில் ஜியோமார்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் தன் விற்பனையை துவங்கி உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் விற்பனை செய்து, அதனை வீடு தோறும் டெலிவரி செய்யும் திட்டத்தை முதலில் மும்பையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் நாடு முழுவதற்கும் ஆன்லைனில் அத்தியாவசிப் பொருட்கள் டெலிவரி சேவை எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருந்தது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கு வந்து பால், பருப்பு வகைகள், அரிசி உட்பட இலவச டெலிவரி கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது.

ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா , ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா பொது முடக்கம் முடிவதற்குள் அத்தியாவசியப் பொருட்களின் டெலிவரி சேவையை ஜியோமார்ட் பரவலாக தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.