இன்று முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இலவச சிறப்பு மருத்துவ முகாம்


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ....தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் 1000 இலவச சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை 10 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவர்களை அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு,

இதையடுத்து இந்தாண்டில் 3.93 லட்சம் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.மேலும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 10,000 மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறை என் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.